states

img

கொரோனாவைக் குணப்படுத்துமா என்று சொல்லுங்கள்..? சுகாதார அமைச்சருக்கு கோமியத்தை அனுப்பி வைத்த காங்கிரஸ் எம்எல்ஏ.....

போபால்:
‘கொரோனாவால் பாதிக்கும் நுரையீரலை பசுவின் கோமியம் குணப்படுத்தும்; எனவே, அனைவரும் நாட்டு பசுவின் கோமியத்தை தினமும் அருந்துங்கள்’ என்று ம.பி. மாநிலம் போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்தார். 

அவருக்கு முன்னதாக, கொரோனாவைக் குணப்படுத்த  கோமியத்தை எவ்வாறு அருந்த வேண்டும்? என்று உ.பி. பாஜக எம்எல்ஏ சுரேந்திரா சிங், செய்முறை விளக்க வீடியோவே வெளியிட்டார்.இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு, போபால் தென்மேற்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி. சர்மா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,உண்மையிலேயே கோமியம், கொரோ னா-வைக் குணப்படுத்துகிறதா...? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.‘பசுவின் கோமியம் கொரோ னாவை குணப்படுத்தும் என்று, இந்தியமருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்), மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ஆகியவை ஏற்றுக் கொண்டுள்ளதா? அவ்வாறு ஏற்றுக் கொண்டுள்ளது என்றால், கிராமத்து மக்கள் சிகிச்சைக்காக  அலைய வேண்டியிருக்காது; கொரோனா, கறுப்புப் பூஞ்சை தொற்றுகளுக்கும் பசுகோமியத்தை பரிந்துரைத்துவிடலாம். ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட வற்றுக்கான தட்டுப்பாடும் நீங்கி விடும்... இதில் அமைச்சர் ஒரு முடிவெடுத்து அறிவிப்பதன் மூலம் நாம் அனைவரும் கோமியம் அருந்தி கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்’ என்று கிண்டலாக குறிப்பிட்டுள் ளார். கூடவே 2 பாட்டில் கோமியத்தையும் பி.சி. சர்மா அனுப்பிவைத்துள்ளார்.

;